Wednesday 21 March 2018

தென்றலின் பெருமாள் தியானம்

காம இச்சைகளை அகற்றும் தியானம்


பெருமாள் தியானம்:


உங்களின் காமச் சிந்தனைகளை முழுவதுமாக குறைக்ககூடிய, உங்களின் வாழ்க்கையைப் பிரகாசமாக மாற்றக்கூடிய, தேவையில்லாத  எண்ணங்களை அறவே நீக்கி, வாழ்வின் நெறிகளை உணர்த்தி, வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு அற்புத தியானப் பயிற்சி.




செய்முறை விளக்கம்:

  • முதலில் தரையில்  வலதுப் புரமாக  திரும்பி (ஒருக்களித்து) படுத்துக்கொள்ளவும்.
  • வலது கையை தலைக்கு முட்டு கொடுத்து தாங்கியப்படி இருக்க வேண்டும்.
  • தலையை வான் நோக்கி  அண்ணார்ந்து பார்த்தப்படி கண்களை மூடியவாறு இருக்க வேண்டும்.
  • பிறகு வலது காலை மடித்து அதன் பாதத்தின் குழிப் பகுதியை, நீட்டியிருக்கும் இடது காலின் மூட்டின் மீது வைத்து கொள்ள வேண்டும் .
  • அடுத்ததாக சுவாசத்தை ஆழப்படுத்த வேண்டும். அதாவது ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
  • இவ்வாறு சுவாசத்தை குறைந்தது இருபது நிமிடமாவது செய்ய வேண்டும்.
  • இவ்வாறு சுவாசிக்கும் போது மூச்சானது இட கலையில் ஓடுகிறது.
  • எனவே எண்ணம் சீரமைக்கப்பட்டு, ஆசைகள் ஒழுங்குப் படுத்தப்படுகிறது.
  • இதை தினமும் குறைந்தது இருபது நிமிடம் செய்து வந்தால் மனதில்  தோன்றும் தேவையற்ற எண்ணங்கள் விலகி வாழ்வில் வெற்றியடைய வழிவகுக்கிறது.


இதனை செய்து வரும்பொழுது குறுகிய காலத்திலே  இதற்கான மாற்றத்தினை நீங்கள் காணலாம் (உணரலாம்) .



எனது நேரடி பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களை அறிய  +918903078128




மேலும் தெரிந்துகொள்ள-Tendral International Foundation Tv - இதை கிளிக் செய்யவும்.



உங்களின் உடல், மனம் மற்றும் ஆத்மா, ஆகியவை தூய்மை பெற,

எனது அன்பும், அரவணைப்பும், ஆசிர்வாதமும், உங்களுக்கு என்றும் உண்டு......!!
                                                   


    


-ஹீலர் தென்றல் 

Tuesday 20 March 2018

கழிவு நீக்கப் பயிற்சி முகாம்

தென்றல் டயட்









இதுவரை உலக நாடுகள் எங்கிலும் நீங்கள் கண்டிராத தென்றலின் நேரடி அற்புத அதிசய உடல் கழிவு நீக்க பயிற்சி முகாம். 



உடல், மனம், ஆத்மா தூய்மை பெறட்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஹீலர் பகவதி, மூச்சு விஞ்ஞானி கலை கார்த்திகேயன், கழிவு நீக்க பயிற்சி புகழ் ஐயா சென்னியப்பன், ஆகியோர்கள் பங்குபெற்று பயிற்சியளிக்கும் அற்புத கழிவு நீக்கப் பயிற்சி முகாம்.

இவர்களுடன் உங்கள் தென்றல்.


நான்கு நாட்களும் ஒரு மணிநேரம் ஒரு ஜூஸ் வழங்கி ஆக அதி சிறந்த உலக தரமிக்க இயற்கை உணவுகளோடு தினம் தினம் ஆனந்த அதிசய இயற்கை குளியல் குளித்து அற்புதமாக கொண்டாடபோகும் நிகழ்ச்சி......


எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நோயை விரட்டி, செல்வத்தை ஈர்த்து,   தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியானவர்களாக,  ஆரோக்கியமானவர்களாக, செல்வம் நிறைந்தவர்களாக, திகழ வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வாழ்த்தி அழைப்பது  உங்கள்  தென்றல். 

நிகழ்ச்சியில் இன்னும் குறைவான இடங்களே உள்ளதால் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் கீழே உள்ள எண்ணினை உடனடியாக தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புக்கு : 8903078128 ,  8825860099.

                              

குறிப்பு: தென்றலின் நிகழ்ச்சிகள் ஒன்று போல மற்றொன்று இருக்காது....
ஒவ்வொன்றும் புதிது...


மேலும் தெரிந்துகொள்ள-Tendral International Foundation Tv - இதை கிளிக் செய்யவும்.


உங்களின் உடல், மனம் மற்றும் ஆத்மா, ஆகியவை தூய்மை பெற,

எனது அன்பும், அரவணைப்பும், ஆசிர்வாதமும், உங்களுக்கு என்றும் உண்டு......!!






-ஹீலர் தென்றல்.


Sunday 18 March 2018

ஆரோக்கியமான இயற்கை உணவுகள்.

தென்றல் டயட் new -2018 




''வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது... சமையலில் உபயோகிக்கப்படும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன'' இத சாப்பிடுங்கள் தொப்பை குறையும்,சக்தி பெருகும்,ஆயுள் நீளும்.



ஜில் ஜங் மிக்ஸ்


தேவையானவை:


வாழைப்பழம் - ஒன்று (வட்டமாக நறுக்கவும்), பேரீச்சம்பழம்  - 10 (கொட்டை நீக்கவும்), நறுக்கிய ஆப்பிள் - கால் கப், கமலா ஆரஞ்சு சுளை -  4 (தோல், கொட்டை நீக்கவும்), மாதுளை முத்துகள் - சிறிதளவு, பனங் கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேன் - சிறிய பாட்டில் ஒன்று.

செய்முறை:


அனைத்து பழங்களையும் பெரிய பேஸினில் போட்டுக் கலக்கி, கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தேன் ஊற்றிப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.

பெரியார் பானம்


தேவையானவை:


கெட்டித் தயிர் - ஒரு கப், மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, தண்ணீர் - 5 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:


கெட்டித் தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும். இதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக ஆற்றி வைக்கவும்.
தாகத்தை தணிக்கும், உடல் சூட்டை தவிர்க்க உதவும் அருமருந்து இது.

ஸ்டார் நெல்லி


தேவையானவை:


நெல்லிக்காய் - அரை கிலோ, பனைவெல்லம் - அரை கிலோ, மண்பானை - ஒன்று (சுத்தமானது).

செய்முறை:


பனைவெல்லத்தைப் பொடி செய்யவும். ஈரம் இல்லாத மண்பானையில் ஒரு கை வெல்லம், ஒரு கை நெல்லிக்காய் என மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேல் பூச்சாக வெல்லம் போட்டு, சுத்தமான வெள்ளைத் துணியால் பானையை மூடி, வெயில் படாத இடத்தில்  வைக்க வேண்டும். 40-45 நாட்களுக்குப் பிறகு துணியில் கொட்டி நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி உபயோகப்படுத்தலாம். கண்ணாடி பாட்டில் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தினமும் சாப்பிடலாம்.
இது மிகவும் சத்துமிக்கது. பெரியவர்கள் 2, 3 துண்டுகளும், குழந்தைகள் ஒரு துண்டும் சாப்பிடலாம். பசியின்மை, மூட்டுவலி நீங்கும். தினமும் சிறிது எடுத்துக் கொண்டால், வாயுத்தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.

கிட்னி ஜூஸ்

தேவையானவை:


சிறிய வாழைத்தண்டு - ஒன்று, பூண்டு - 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று, துளசி - சிறிதளவு, மிளகு - 3.

செய்முறை:


வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கி... பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.
வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்... சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்

எனர்ஜி மிக்ஸ் 


தேவையானவை:


பாசிப்பருப்பு - ஒரு கப், வெள்ளரி துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், கோஸ் துருவல், பீட்ரூட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:


பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து பாசிப்பருப்புடன் அனைத்துத் துருவல்களையும் சேர்த்து... உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

பிஸ்கட் பேடா


தேவையானவை:


மேரி பிஸ்கட் - 6, ரஸ்க் - 2, தேங்காய் பால்- தேவையான அளவு, தேன் - தேவையான அளவு, பனங்கற்கண்டு (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், செர்ரி பழம் - சிறிதளவு.

செய்முறை: 


மேரி பிஸ்கட்டையும், ரஸ்க்கையும் உடைத்து, மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைக்கவும். இதனுடன் தேங்காய் பால் , பனங்கற்கண்டு சேர்த்து தேன் விட்டு பிசைந்து உருண்டையாக பிடித்து, தட்டையாக்கினால்... பிஸ்கட் பேடா தயார்.
நறுக்கிய செர்ரி பழத்தை, இதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.

தேங்காய் - மாங்காய் - சோள சுண்டல்


தேவையானவை:


முற்றிய தேங்காய் - முக்கால் மூடி, அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) - ஒன்று, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - முக்கால் கப், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப், எலுமிச்சை பழம் - அரை மூடி, நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:


தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து... உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.
மாலை நேர டிபனுக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.

இனிப்பு அவல் பொங்கல்


தேவையானவை:


தட்டை அவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய பேரீச்சை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த திராட்சை - 10, செர்ரி பழம் - 5 (ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்).

செய்முறை:


அவலை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, நீர் தெளித்து 5 - 10 நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல், பொடியாக நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், காய்ந்த திராட்சை சேர்த்து... பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கினால், இனிப்பு அவல் பொங்கல் ரெடி.
இது ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும். குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும். காலை, இரவு நேர டிபனாக சாப்பிடலாம்.

பூசணி பாயாசம்


தேவையானவை:


துருவிய மஞ்சள்பூசணி - அரை கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், பச்சைக் கற்பூரம் - மிளகளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:


தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத் தூவலாம்.

பொட்டுக்கடலை மாவு உருண்டை


தேவையானவை:


பொட்டுக் கடலை மாவு - ஒரு கப், ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பனங் கற்கண்டு - கால் கப், முந்திரி துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங் காய்ப் பால் - தேவையான அளவு.

செய்முறை:


பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய்த்தூள், பனங் கற்கண்டு, முந்திரி துருவல் சேர்த்து... தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இந்த மாவு உருண்டை, குழந்தை களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்டது.

அமலா பால் மசாலா பொரி


தேவையானவை:


பொரி - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், நறுக்கிய புதினா - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய சதுரமாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - சிறிதளவு.

செய்முறை:


நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையைபொரியில் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், மாங்காய் சேர்த்து... உப்பு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தூவிக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
விருப்பப்பட்டால்... ஓமப்பொடி (கார வகை), தட்டை, பொரித்த கார்ன் ஃப்ளேக்ஸை ரெடிமேடாக வாங்கி கலந்தும் சாப்பிடத் தரலாம்.

சிம்ரன் சாலட்


தேவையானவை:


முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கறுப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய காராமணி (சேர்த்து) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை,  இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:


முளைகட்டிய பயறு வகைகளுடன்... உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைத்தால்... சத்தான சாலட் தயார்.

பாகுபலி பானகம்


தேவையானவை:


வெல்லத் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, பச்சைக் கற் பூரம் - கடுகளவு.

செய்முறை:


வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டவும். கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளை வெல்லக் கரைசலில் சேர்த்து, பொடித்த பச்சைக் கற்பூரத்தை போட்டு, நன்கு ஆற்றி பருகவும்.
சுவையான, மணமான, இந்த பானகம் உடனடி எனர்ஜி தரும்.

ரோபோ பச்சடி


தேவையானவை:


ஆப்பிள் - பாதி, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், உலர்திராட்சை - ஒரு டீஸ்பூன், பாதாம் - முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பேரீச்சை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:


ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும். கடைந்த கெட்டித் தயிரில் சர்க்கரை சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும்  சேர்த் துக் கலக்கினால்... மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.
சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

ஜப்பான் உருண்டை


தேவையானவை:


தினை மாவு - ஒரு கப், வெல்லத் துருவல் - கால் கப், காய்ந்த திராட்சை, பாதாம் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு.

செய்முறை:


தினை மாவுடன் வெல்லம், திராட்சை, பாதாம், தேங்காய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து, தேன் ஊற்றிப் பிசையவும். மாவை சிலிண்டர் வடிவில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
நார்ச்சத்து மிகுந்த உணவு இது.

தமன்னா கூழ்


தேவையானவை:


பப்பாளிப்பழம் - ஒன்று (நன்றாக பழுத்தது), மாதுளை முத்துகள் - கால் கப், உலர் திராட்சை - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:


பப்பாளிப்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இந்தக் கூழில் மாதுளை முத்துகள், காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
சத்தான இந்தக் கூழ், மலச்சிக்கலை குணப்படுத்தும்.

மும்பை பானம்


தேவையானவை:


தர்பூசணி - அரை பழம், புதினா - சிறிதளவு, பனங் கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெல்லிக்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:


தோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.
வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்கு நல்லது.

தென்றல் புரட்டல்


தேவையானவை:


பேபிகார்ன் - அரை கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை வேர்க்கடலை - கால் கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:


காய்ந்த மிளகாய், பூண்டு, தனியா மூன்றையும் நீர் சேர்க்காமல் அரைக்கவும். வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து, தோல் உரித்து, நறுக்கிய பேபிகார்ன், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கலக்கவும். அரைத்து வைத்த பொடியை மேலே தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

தென்றல் பிரியாணி


தேவையானவை:


சிவப்பு அவல் - ஒரு கப், முள்ளங்கி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:


தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, காய்கறிகளை சேர்த்து... உப்பு, மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

எனர்ஜி மில்க்


தேவையானவை:


முழு கோதுமை - 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அச்சு வெல்லம் - 2.

செய்முறை:


முதல்நாள் இரவே கோதுமையை ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் இதை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். தேங் காயை துருவி மிக்ஸியில் அடித்து தேங்காய்ப் பால் எடுத் துக் கொள்ளவும். இரண்டு பாலையும் வடிகட்டி, ஒன்றாக கலந்து கொள்ளவும். அச்சு வெல்லத்தை பொடித்து நீர் விட்டு வடிகட்டி, அதை பாலுடன் சேர்த்து நன்கு ஆற்றி அருந்தவும்.

தென்றல் உப்புமா


தேவையானவை:


அவல் - ஒன்றரை கப், கேரட் துருவல், பொடி யாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் - தலா அரை கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்),  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:


அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும். கேரட் துருவல், பொடியாக நறுக்கிய தக்காளியை ஒன்று சேர்த்து, இதை ஒரு பாகம் அவலுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
தேங்காய் துருவல்,  உப்பு, வெள்ளை மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்து, இதனை இரண்டா வது பாக அவலில் கலக்கவும். மூன்றா வது பாக அவலில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறவும்.
விருப்பமான சுவையுள்ள அவலை தனித்தனியாக சாப்பிடலாம். அல்லது, கப் அல்லது பவுலில் கீழே கொத்த மல்லி அவல், அடுத்து தேங்காய் அதன்மேல் கேரட், தக்காளி அவலை வைத்து அழுத்தி... கீழே கவிழ்த்தால், கலர்ஃபுல் தென்றல் உப்புமா ரெடி.

சௌசௌ தயிர் பச்சடி


தேவையானவை:


தோல் சீவி துருவிய சௌசௌ - 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:


முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை கடைந்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். சௌசௌ, வெள்ளரி, வெங்காயத்தைப் பிழிந்து இதனுடன் சேர்த்து, உப்புப் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி பரிமாறவும்.

காய்கறி ஊறுகாய்


தேவையானவை:


மாங்காய், கேரட்- தலா ஒன்று, சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:


மாங்காய், கேரட்டை சிறிய சதுரங்களாக நறுக்கவும். இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்க்கவும். மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும்.
இந்த ஊறுகாயை சப்பாத்தி, தயிர் சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

தென்றல் லஸ்ஸி


தேவையானவை:


தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், நன்றாகப் பழுத்த கொய்யாப்பழம் - ஒன்று (சீஸனுக்கு தகுந்த பழங் களைப் பயன்படுத்தலாம்), கறுப்பு திராட்சை - 10.

செய்முறை:


கெட்டித் தயி ருடன் சிறிதளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய கொய்யாவை சேர்த்து மிக்ஸி யில் அடிக்கவும். இதில், விதை நீக்கிய கறுப்பு திராட் சையை இரண்டாக நறுக்கிப் போட்டு பருகவும்.

பச்சை வேர்க்கடலை துவையல்


தேவையானவை:


பச்சை வேர்க்கடலை - அரை கப், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.  

செய்முறை:


கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
எல்லா வகை டிபனுக்கும் சிறந்த சைட் டிஷ் இது.




எனது நேரடி பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களை அறிய  +918903078128




மேலும் தெரிந்துகொள்ள-Tendral International Foundation Tv - இதை கிளிக் செய்யவும்.



உங்களின் உடல், மனம் மற்றும் ஆத்மா, ஆகியவை தூய்மை பெற,
எனது அன்பும், அரவணைப்பும், ஆசிர்வாதமும், உங்களுக்கு என்றும் உண்டு......!!






- ஹீலர் தென்றல்.




Thursday 15 March 2018

அவல் உணவு வகைகள்

தென்றல் டயட் - 2018




அவல் உணவுகள்:



இத சாப்பிடுங்கள் வியாதியை தெறிக்க விடுங்கள்.... 


1. அவல் - கல்கண்டு பொங்கல்


தேவையானவை:


அவல் - 2 கப், கல்கண்டு - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை:


அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். கல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்கவும். மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

2. அவல் கேசரி


தேவையானவை:


அவல் - 2 கப், நாட்டு சர்க்கரை - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:


அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில்  அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் 'கமகம' அவல் கேசரி ரெடி

3. அவல் லட்டு


தேவையானவை:


அவல் - 3 கப், நாட்டு சர்க்கரை - ஒரு கப், முந்திரி, திராட்சை - ஒரு கைப்பிடி, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - முக்கால் கப்.

செய்முறை:


கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் அவலை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த அவலுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.

4. அவல் மோர்க்கூழ்


தேவையானவை:


அவல் - 2 கப், லேசாக புளித்த ஒரிஜினல் கெட்டி மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடிக்கவும். அவலுடன் மோர் மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, (மாவு தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும்) உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகும்வரை அடிக்கடி கிளறவும். கூழ் ஒட்டாமல் வந்ததும் சிறிது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

5. அவல் பாயசம்


தேவையானவை: 


அவல் - ஒரு கப், சர்க்கரை - முக்கால் கப், தேங்காய்ப் பால் - அரை கப், முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை


அவல், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அவலை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். ஆறியதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும். சுவை மிகுந்த இந்தப் பாயசத்தை நிமிடங்களில் செய்து விடலாம். அபாரமாக இருக்கும்.

6. அவல் புட்டு


தேவையானவை


அவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - கால் கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை


அவலை நெய் விட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், வெல்லப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை சுற்றி எடுக்கவும்.

இது புட்டு போன்று பொலபொலவென்று இருக்கும். விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி சேர்த்தும் பரிமாறலாம்.

7. அவல் - தேங்காய்ப்பால் பாயசம்


தேவையானவை


அவல் - ஒரு கப், தேங்காய் - ஒன்று, வெல்லம் - முக்கால் கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை


அவல், முந்திரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தேங்காயைத் துருவி இரண்டு விதமாக பால் எடுக்கவும். அவலை, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலில் சேர்த்து வேக விடவும்.

அவல் வெந்ததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

8. அவல் உப்புமா


தேவையானவை


அவல் - 2 கப், வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - அரை மூடி, கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 


அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு, அதில் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். பரிமாறும்போது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

9. அவல் பொரி உருண்டை


தேவையானவை


அவல் பொரி - 3 கப், வெல்லத்தூள் - ஒரு கப், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கைப்பிடி.

செய்முறை: 


முந்திரி, அவல் பொரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக் கடலை, அவல் பொரியைக் கலக்கவும். அவல் பொரி கலவையை பாகில் கொட்டிக் கிளறி, உருண்டை பிடிக்கவும். மாலை நேரத்துக்கேற்ற மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் இது!

10. அவல் - வெஜ் உப்புமா


தேவையானவை


அவல் - 2 கப், கேரட், உருளைக்கிழங்கு - தலா 1, பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை


அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். மணத்தில் மட்டுமல்ல.. சுவையிலும் அசத்தும் இந்த உப்புமா!

11. அவல் - வெஜ் பிரியாணி


தேவையானவை


அவல் - 2 கப், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட் - தலா 1, காலிஃப்ளவர் - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 5 பல், சோம்பு, கசகசா - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, எண்ணெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை


தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, காய்களை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். அவலை தண்ணீரில் கழுவி, நீரை வடித்து விடவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கசகசா தாளித்து பட்டை, இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், கீறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.

காய்கள் வெந்ததும் அவலை உதிர்த்து சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். விரும்பினால் பிரெட் துண்டுகளை எண்ணெயில் பொரித்தும் இதனுடன் சேர்க்கலாம்.

12. அவல் பொங்கல்


தேவையானவை


அவல், பயத்தம்பருப்பு - தலா ஒரு கப், மிளகு - ஒன்றரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, நெய் - அரை கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை


பயத்தம்பருப்பை வேக விடவும். பருப்பு வெந்ததும் அவலை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கடாயில் நெய்யை ஊற்றி மிளகு, சீரகம் தாளித்து, முந்திரி இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, அதை அவல் பொங்கலில் கொட்டிக் கிளறவும். இதைச் செய்வது சுலபம்.. ருசியும் அபாரம்!

13. கறிவேப்பிலை பொடி அவல்


தேவையானவை


அவல் - 2 கப், கறிவேப்பிலை - 2 கைப்பிடி, உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு - 2 கைப்பிடி, மிளகு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 


கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்பு வகைகள், மிளகு மற்றும் மிளகாயை எண்ணெயில் வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்தால் கறிவேப்பிலை பொடி தயார்!

அவலை கழுவி, நீரை வடித்து ஒரு நிமிடம் ஊற விடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதனுடன் ருசிக்கேற்ப கறிவேப்பிலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.

14. மோர் அவல்


தேவையானவை


அவல் - 2 கப், கெட்டியான ஒரிஜினல் மோர் - முக்கால் கப், பெருங் காயத்தூள் - 2 சிட்டிகை, பச்சைமிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலைப்-பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை


அவலை கழுவி, தண்ணீரை வடித்து, கெட்டி மோரில் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். ஐந்து நிமிடம் ஊறினால் போதும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, அதில் பச்சைமிளகாயை போடவும். ஊற வைத்து உதிர்த்த அவல், பெருங்காயத்தூள் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

15. புதினா பொடி அவல்


தேவையானவை


அவல் - 2 கப், புதினா - ஒரு கட்டு, (இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்யவும்), உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.

செய்முறை


புதினாவை நிழலில் உலர்த்தி, கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். அவலை தவிர மற்ற எல்லாவற்றையும் புதினா வுடன் சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

அவலை கழுவி, தண்ணீரை வடித்து விட்டு ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அவலை ஒரு நிமிடம் வதக்கி, புதினா பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

16. புளி அவல்


தேவையானவை


அவல் - 2 கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, எண்ணெய் - 4 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 


அவலை நன்றாக கழுவி, கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசலில் ஊற விடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளை தாளித்து, ஊற வைத்த அவலை உதிர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

17. தேங்காய்ப்பொடி அவல்


தேவையானவை


அவல் - 2 கப், தேங்காய் - ஒரு மூடி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை


கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். தேங்காயை துருவி, கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

பிறகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். அவலை நன்றாக கழுவி, தன்ணீரை வடித்து, 2 நிமிடம் ஊற விடவும். பிறகு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஊறிய அவலை உதிர்த்து போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சுவைக்கேற்ப பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

18. அவல் அடை


தேவையானவை:

 

அவல் - 2 கப், ஒரிஜினல் மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 6, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை


அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். கெட்டி மோரில் உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஊறிய அவலை சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல் காய்ந்ததும் மாவை அடையாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

18. அவல் போண்டா


தேவையானவை: 


அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 6, இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை


உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை உருளை - அவல் கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு மசித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

கடலைமாவுடன் அரை டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருண்டைகளை கடலைமாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

19. அவல் ஃப்ரூட் சாலட்


தேவையானவை


அவல் - 2 கப், ஆப்பிள் - பாதியளவு, ஆரஞ்சு - 10 சுளைகள், பச்சை திராட்சை - ஒரு கைப்பிடி, பப்பாளி - ஒரு துண்டு, வாழைப்பழம் - ஒன்று, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 10, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: 


பழங்களில் கொட்டை, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து பழக்கலவையுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு கலந்தால் அவல் ஃப்ரூட் சாலட் தயார்!

உடனடி புத்துணர்வு தரும் இந்த சாலட்டை விரைவாக செய்து அசத்தலாம்.

20. அவல் கார புட்டு


தேவையானவை: 


அவல் - 2 கப், தேங்காய் துருவல் - 2 கைப்பிடி, பச்சைமிளகாய் - 4, எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 


அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, தேங்காயை பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் கீறிய பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து உதிர்த்த அவலையும் சேர்க்கவும். கடுகை தாளித்துக் கொட்டி, நன்றாக கிளறவும்.

21. அவல் மிக்சர்


தேவையானவை: 


அவல் - 3 கப், வேர்க்கடலை, பொட்டுக் கடலை - தலா அரை கப், முந்திரி, திராட்சை - தலா ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 


கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மாலையில் கொறிக்க உகந்த வித்தியாசமான மிக்சர் இது.

22. அவல் - பயறு சாலட்


தேவையானவை: 


அவல் - 2 கப், தோல் நீக்கிய பாசிப்பருப்பு, தோல் நீக்காத பச்சை பயறு - தலா ஒரு கப், பச்சைமிளகாய் - 4, எலுமிச்சை - அரை மூடி, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 


பயறு வகைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்து விடவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஊறவைத்த பயறு வகைகளுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

23. அவல் - உருளை கொழுக்கட்டை


தேவையானவை: 


அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 3, கறிவேப்பிலை, கொத்த மல்லி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவை யான அளவு.

செய்முறை: 


உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். பிறகு அவலை உதிர்த்து உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

மாவை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து குக்கரில் (வெயிட் போடாமல்) ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

24. அவல் உசிலி


தேவையானவை: 


அவல் - 2 கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 


பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக வடைமாவு பதத்தில் அரைக்கவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் அரைத்த பருப்பு விழுது, பொடி யாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். உதிர் உதிரான அவல் உசிலி தயார்!

25. அவல் வடகம்


தேவையானவை: 


அவல் - 3 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 10, கறிவேப்பிலை, கொத்தமல்லி - 2 கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 


வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஊறிய பருப்புடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும். ஊறிய அவலை உளுந்துமாவுடன் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். அதை சிறு வடகமாக உருட்டி, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.

இது, வெங்காய போண்டா போல் வாசனையோடும் ருசியோடும் இருக்கும்!

26. அவல் வடை


தேவையானவை: 


அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, இஞ்சி - ஒரு விரல் அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 


உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும்.

ஊறிய அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இதனுடன் கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசைந்து, சிறு உருண்டை களாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டை களை வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

27. அவல் - வெஜ் சாலட்


தேவையானவை: 


அவல் - 2 கப், கேரட், தக்காளி, வெங்காயம் - தலா 1, சிறிய வெள்ளரிக்காய் - 1, பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழம் - அரை மூடி, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி.

செய்முறை: 


அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, பொடியாக நறுக்கவும்.

பிறகு அவற்றுடன் உப்பு, எலுமிச்சம்பழ சாறு, உதிர்த்த அவலை சேர்த்துக் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

28. அவல் இட்லி


தேவையானவை: 


அவல் - 2 கப், ஒரிஜினல் கெட்டி தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி கேரட் துருவல் - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை


அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடத்துக்கு பிறகு அவலை உதிர்த்து தயிருடன் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீறிய பச்சைமிளகாயைப் போட்டு, கேரட் துருவல், உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி குக்கரில் வெயிட் போடாமல் வேக விட்டு எடுக்கவும்.
இந்த இட்லி பூ போல மிருதுவாகவும் பார்க்க கலர்ஃபுல்லாகவும் இருக்கும்.


எனது நேரடி பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களை அறிய  +918903078128


Thendral international foundation tv- YouTube



உங்களின் உடல், மனம் மற்றும் ஆத்மா, ஆகியவை தூய்மை பெற,
எனது அன்பும், அரவணைப்பும், ஆசிர்வாதமும், உங்களுக்கு என்றும் உண்டு......!!


         - ஹீலர் தென்றல்.